இமான் பிறந்தநாள்... ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து...

இமான் பிறந்தநாள்... ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து...

தளபதி விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் டி.இமான். தொடர்ந்து பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கிட்ட தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி சிலபல காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது டி. இமான் அமீலா என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதுவரை சுமார் 125 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 

இமான் பிறந்தநாள்... ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து...

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் டி.இமான் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story