ரத்து செய்யப்பட்ட ‘லியோ’ படத்தின் ப்ரீமியர் காட்சி – சோகத்தில் அமெரிக்க ரசிகர்கள்.
லியோ படத்தின் ஃபீவர் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் படத்தின் ப்ரீமியர் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது அங்குள்ள விஜய் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
தொடர்ந்து சில நாட்களாக லியோ பட பேச்சு தான் இணையத்தை வட்டமடிக்கிறது. பட போஸ்டர்கள், பாடல்கள், ஆடியோ லான்ச் ரத்து, பிரீமியர் ஷோ என கலைகட்டியுள்ள நிலையில் தற்போது படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் ரத்தாகியுள்ளது. அமெரிக்காவில் வரும் 18ஆம் தேதியே லியோ திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ஐமேக்ஸ் ப்ரீமியர் காட்சி ரத்தாகியுள்ளது. அதற்கு காரணம் படம் அனுப்ப தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் புக் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி செலுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் ஐமேக்ஸ் நீங்கலாக மற்ற இடங்களில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.