கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியன் 'நதிகளில் நீராடும் சூரியன்'... முக்கிய அப்டேட்!

simbu-and-gvm3

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும்  ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘ படத்தின் முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. 

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் இறுதி  கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

nadhikalileneeradum-suriyan-3

இந்நிலையில் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘ படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் அந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு  !

தற்போது ‘நதிகளிலே நீராடும் சூரியன்' படம் குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அந்தப் படத்திற்கான போட்டோஷூட் இன்று நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

இதற்கிடையில் 'மாநாடு' படத்தை அடுத்து 'சில்லுனு ஒரு காதல்'' பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' என்ற படத்திலும் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this story