இன்னும் 75 நாட்களில்.... நடிகர் சிம்பு பகிர்ந்த 'தக் லைஃப்' போஸ்டர்...!

thug life

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’Thug Life’ படம் இன்னும் 75 நாட்களில் வெளியாகவுள்ளதாக சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் , இந்தியன்-3 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தக் லைப்  படத்தில் சிலம்பரசன், நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஐஷ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.



இந்த திரைப்படம்  ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்  வெளியாகும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தக் லைஃப் படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் இருப்பதாக சிறப்பு போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.  
 

Share this story