'சம்பவம் வெயிட்டிங்'.. வீர தீர சூரன்' பட அப்டேட்டை தெரிவித்த பிரபலம்..!

veera dheera sooran

விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை தெரிவித்த தயாரிப்பாளர் "விரைவில் சம்பவம் வெயிட்டிங்" என்று தெரிவித்துள்ளார். இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் "வீர தீர சூரன்". இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும், பெரும்பாலான காட்சிகள் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா உட்பட பலர் நடித்து வருகிறார். ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் தயாராகி வருவதாகவும், முதல் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை ஷிபு தமீன்ஸ் சற்றுமுன் தெரிவித்தார். மதுரையில் இருந்து சற்றுமுன் கிடைத்த தகவல், "வீர தீர சூரன்" படத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் பிசியாக இருப்பதால் இறுதி கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

34 ஆண்டுகள் சாதனை செய்த சியான் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு சிங்கிள் போஸ்டர் மற்றும் வெளியிடப்பட்டால் அது முறையாகாது, எனவே ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் வெயிட்டிங். விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, "வீர தீர சூரன்" படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story