தமிழ்நாட்டில் இந்தியன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா..?
1721740319579

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த படம் இந்தியன் 2. இப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை இந்தப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே மக்களுடைய கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி , இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 51.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.