விரைவில் வெளியாகும் ‘இந்தியன் 2’ கிளிம்ப்ஸ் வீடியோ.. வெளியானது புதிய அப்டேட்

indian 2

‘இந்தியன் 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

ஷங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  

indian 2

ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் 90 வயது தாத்தாவாக இந்த படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.  

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் அருகே உள்ள டச்சு கோட்டையில் படமாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தைவான் நாட்டிற்கு படக்குழுவினர் செல்லவுள்ளனர். அங்கு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story