சென்னையில் விறுவிறுப்பாக படமாகும் ‘இந்தியன் 2’.. விரைவில் இணையும் கமல்ஹாசன் !

indian 2

 கமலின் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ‘இந்தியன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

indian 2

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, பீகார் என பல இடங்களில் நடைபெற்றுள்ளது. கடைசியாக திருப்பதி நடைபெற்ற படப்பிடிப்பில் ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் கமல் மற்றும் காஜல் அகர்வால் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

indian 2

திருப்பதி படப்பிடிப்பு நிறைவுபெற்றதை அடுத்து தற்போது சென்னை பனையூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 30 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வாலின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் இந்த படபிடிப்பில் கமல் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story