‘இந்தியன் 2’-ல் இணைந்த இளம் நடிகர்... இயக்குனர் ஷங்கருடன் இருக்கும் புகைப்படம் வைரல் !
‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் மலையாள இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார்.
மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘புத்தம் புது காலை’ மற்றும் ‘பாவக் கதைகள்’ என்ற இரு அந்தாலஜி படங்களில் ஒரு பகுதியில் நடித்திருந்தார். பின்னர் கமலுடன் இணைந்து விக்ரம் படத்திலும், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் ஷங்கருடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் காளிதாஸ் ஜெயராம் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. இந்த படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.