வயதான பாட்டி கெட்டப்.. 3.5 மணி நேரம் மேக்கப் பாடும் காஜல் அகர்வால்... ‘இந்தியன் 2’ அப்டேட்
இந்தியன் 2 படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் 3.5 மணி நேரம் மேக்கப் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘இந்தியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 26 ஆண்டு கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா தயாரித்து வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தற்போது இப்படத்தின் படப்படிப்பு பட கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் ப்ரீயட் பகுதி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் 90 வயது கமலஹாசனுக்கு ஜோடியாக வயதான பாட்டி கெட்டப்பில் காஜல் அகர்வால் நடித்து வருகிறது. அதற்காக மூன்றரை மணி நேரம் வரை தினமும் காஜல் அகர்வால் மேக்கப் போடுகிறாராம். அவரின் தோற்றம் நம்ப முடியாத அளவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.