‘இந்தியன் 2’-ல் அவ்வை சண்முகியாக மாறிய கமல்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

indian 2

‘இந்தியன் 2’ படத்தில் அவ்வை சண்முகி போன்று ஒரு பெண் வேடத்தில் கமல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் - கமலஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். 

indian 2

கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. புதுபுது தொழில்நுட்பங்களை தனது படங்களில் பயன்படுத்துவது இயக்குனர் ஷங்கரின் வழக்கம். அந்த வகையில் ‘இந்தியன் 2’ படத்திலும் சில புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவுள்ளார். இதற்கான அமெரிக்காவிற்கு சென்றுள்ள அவர், புகழ்பெற்ற VFX ஸ்டுடியோ ஒன்றில் ‘இந்தியன் 2’ பணிகளை கவனித்து வருகிறார். 

indian 2

இந்நிலையில் ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்து சுவாரஸ்சியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஒரு சிறிய பெண் வேடத்தில் கமல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ‘அவ்வை சண்முகி’ படத்தில் வயதான பெண் தோற்றத்தில் நடித்து கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story