தைவான் புறப்பட்ட உலகநாயகன்.. இந்தியன் 2 அப்டேட் !

indian 2

‘இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக நடிகர் கமல் தைவான் புறப்பட்டு சென்றுள்ளார். 

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2‘ திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டத்துடன், அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. 

indian 2

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் பல இந்த படத்தில் பணியாற்றி வருகிறது. 

அந்த வகையில் இந்த படத்தின் பிரம்மாண்ட க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று தைவான் நாட்டில் படமாக்கப்பட உள்ளது. அதற்காக நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தைவான் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ரெயில் ஒன்றில் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட உள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பின் காட்சிகள் படத்தில் முக்கிய இடத்தை பெறும் என கூறப்படுகிறது.  

 

Share this story