சென்னையில் தொடங்கிய ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு... வெளியானது சூப்பர் அப்டேட் !

indian 2
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 

ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’ திரைப்படம். முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் உருவாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் சில பிரச்சனைக்கு பிறகு மீண்டும் உருவாகி வருகிறது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

indian 2

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, பீகார் என பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடைசியாக இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் கமல் ஹெலிகாப்டரில் வந்து சென்று காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு 30 நாட்கள் வரை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ள இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெறும் என கூறப்படுகிறது. 

 

Share this story