‘இந்தியன் 2’ படக்குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்... வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு !

‘இந்தியன் 2’ படப்பிடிப்பை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் தாத்தாவாக மிரட்டவிருக்கிறார் உலகநாயகன் கமலஹாசன். இந்தியன் படத்தின் வெற்றிக்கு பல ஆண்டு கழித்து தற்போது ‘இந்தியன் 2’ படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் இந்த படத்திலிருந்து வெளியாகும் அப்டேட்டுகள் தான்.
ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற போதிலும் கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் 90 வயது தாத்தாவாக இந்த படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
கமல் மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள டச்சுக்கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளுக்காக வெளிநாட்டு ஸ்டெண்ட் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அருகே வாழும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது படக்குழுவினரிடம் கோயிலுக்கு நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
People gathering to watch Ulaganayagan @ikamalhaasan arriving at #Indian2 shooting spot??#KamalHaasan pic.twitter.com/8hAWKZxS5S
— illilli??? ???????? ???????????????? ???illilli (@Mass_Maharaja) March 10, 2023