தென் ஆப்ரிக்கா செல்லும் ‘இந்தியன் 2’ படக்குழு... முக்கிய காட்சிகள் படமாக்க திட்டம் !

indian 2

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் கமலஹாசன் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ஷங்கரின் படங்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த கூட்டணியில் உலகநாயகனும் சேர்ந்துள்ளதால் செல்லவே தேவையில்லை. ஏற்கனவே இந்த கூட்டணியில் சூப்பர் ஹிட்டடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படத்தில் சேனாபதியின் கதாபாத்திரம் அதிகமாக இருக்க போகிறது. 

indian 2

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டது. நடுவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் 90 வயது தாத்தாவாக இந்த படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். தற்போது கமல் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள டச்சுக்கோட்டையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

indian 2

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக கமல் உள்ளிட்ட படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளனர். அங்கு ரயில் ஒன்றில் சர்வதேச தரத்தில் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. 14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்பில் இந்த சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளது. வரும் மே மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து உடனடியாக தயாரிப்பு பணிகளை தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story