புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’.. புதிய அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர் !

indian 2

 புதிய தொழில்நுட்பத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’.  இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

indian 2

இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் அமோகமாக நடைபெற்று வருகிறது. ஓடிடி உரிமை மட்டும் சுமார் 220 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நிறைவுபெற்றதாக கூறப்படுகிறது. 

தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எப்போது புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவர் இயக்குனர் ஷங்கர். அந்த வகையில் ‘இந்தியன் 2’ படத்திற்காகவும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவுள்ளார். இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Lola VFX ஸ்டுடியோவிற்கு சென்ற ஷங்கர், அங்கு ‘இந்தியன் 2’ பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே ‘கல்கி’ படத்தின் நிகழ்ச்சிக்காக சென்றுள்ள நடிகர் கமலஹாசனும், அமெரிக்காவில் தான் இருக்கிறார். அதனால் அவரும் விரைவில் ‘இந்தியன் 2’ பணிகளில் கலந்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. 

 

 

 

Share this story