இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் அப்டேட்
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் மட்டும் இந்தியாவில் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 26 கோடி வசூல் செய்திருந்த இந்தியன் 2 திரைப்படம், இரண்டாவது நாளில் ஏறக்குறைய ரூபாய் 17 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இந்தியன் 2 விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள தேதி வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Thatha varaaru, kadhara vida poraaru 🔥#Indian2 is coming to Netflix on 9 August in Tamil, Telugu, Malayalam and Kannada!#Indian2OnNetflix pic.twitter.com/cJN0JWaprp
— Netflix India South (@Netflix_INSouth) August 4, 2024
Thatha varaaru, kadhara vida poraaru 🔥#Indian2 is coming to Netflix on 9 August in Tamil, Telugu, Malayalam and Kannada!#Indian2OnNetflix pic.twitter.com/cJN0JWaprp
— Netflix India South (@Netflix_INSouth) August 4, 2024