இந்தியன் 2 காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடுவதாக புகார்

இந்தியன் 2 காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடுவதாக புகார்

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் தைவான் நாட்டிற்கு சென்ற இந்தியன் 2 படக்குழு, பாடல் காட்சிகளை படமாக்கினர். இதைத் தொடர்ந்து மொத்த படப்பிடிப்பையும்நிறைவு செய்தனர். 

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாகவும், சமூக வலைதளங்களில் இதை வௌியிடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பட தயாரிப்பாளர் தரப்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் தரப்பட்டது. 

Share this story