ஒரே இடத்தில் இந்தியன் 2, தலைவர் 170 படப்பிடிப்பு... ரஜினி - கமல் நெகிழ்ச்சி...

ஒரே இடத்தில் இந்தியன் 2, தலைவர் 170 படப்பிடிப்பு... ரஜினி - கமல் நெகிழ்ச்சி...

லைகா நிறுவனம் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர் .  

ஒரே இடத்தில் இந்தியன் 2, தலைவர் 170 படப்பிடிப்பு... ரஜினி - கமல் நெகிழ்ச்சி...

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  “இந்தியன் 2”  லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அங்குத்  நடைபெறுகிறது.இதனால், ரஜினி கமல் இருவரும் நேரில் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


 

Share this story