இந்தியன் 2 படத்தின் `கதறல்ஸ்' வீடியோ பாடல் வெளியானது

Indian 2


தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி இந்தியன் 2 படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல்பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்புடன் வெளியாகியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இந்நிலையில், இப்படம் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியன் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story