இந்தியன் 3 விரைவில் படப்பிடிப்பு! ஷங்கர் அதிரடி திட்டம்..

Shankar

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை12ந் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பை படக்குழு தொடங்கி உள்ளது.தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்த படத்தில்,கமல்ஹாசன், சுகன்யா,மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் தொழில்நுட்பம், திரைக்கதை, மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர். காலப்போக்கில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை இப்படம் பெற்றது.இந்தியன் 2: இந்தியன் படத்தில் முதல் பாகத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை பழிவாங்கும் சேனாதிபதியாக நடித்திருந்தார் கமல். அதே போல இந்தியன் 2வில் உலக அளவில் ஊழல் செய்பவர்களை பழிதீர்ப்பதும், ஒவ்வொரு அரசு அதிகாரி வீட்டிலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்களை அவரது வீட்டில் இருப்பவர்களே காட்டிக்கொடுப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

indian 2

28 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது. பிரம்மாண்டத்தை நம்பி மட்டுமே இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார் என்றும், மோசமான மேக்கிங், கதை, திரைக்கதையில் சொதப்பல், சில காட்சிகளில் மட்டுமே கமல் ஸ்கோர் செய்துள்ளார் என விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் இந்தியன் 2 படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்தியன் 3 படத்தில் உள்ள குறைகளை சரி செய்து அதற்கான காட்சிகளை மீண்டும் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஷங்கர் மற்றும் கமல் இருவரும் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ஆகும் செலவை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்காமல் அந்த செலவை தானே ஏற்கிறேன் என்று கமல் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2வில் விட்டதை இந்தியன் 3ல் பிடிக்க இருவரும் சேர்ந்து பக்காவாக பிளான் போட்டு உள்ளார்.

Share this story