‘இந்தியன்’ வெளியாகி 27 ஆண்டுகள்... கொண்டாடும் ரசிகர்கள் !

indian

 கமலஹாசனின் ‘இந்தியன்’ படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கடந்த 1996-ஆம் ஆண்டு உலகநாயகன் நடிப்பில் மிரட்டலான வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சேனாபதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கமலஹாசன் நடித்திருந்தனர். இந்த படத்தில் கமலுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 

indian

ஏ.எம்.ரத்னம் தயாரித்த இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி சூப்பர் ஹிட்டடித்தது. கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது. இதையொட்டி ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

 

Share this story