தைவான் படப்பிடிப்பை முடித்த கமல்... 'இந்தியன் 2' அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா ?

indian 2

'இந்தியன் 2' படத்தின் தைவான் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார். 

 ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் பணிகள் நடுவில் தொய்வை சந்தித்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

indian 2

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தின் டச்சுக்கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் கமல் மற்றும் காஜல் அகர்வால் காட்சிகள் படமாக்கப்பட்டது. அங்கு 90 வயது தாத்தா கெட்டப்பில் கமல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக 3 மணி நேரம் வரை மேக்கப் போடப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு காட்சிக்காகவும் கடினமாக கமல் உழைத்து வருகிறார். 

சென்னை படப்பிடிப்பு பிறகு கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தைவான் நாட்டிற்கு சென்றனர். அங்கு இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து உடனடியாக படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளனர். அங்கு க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story