'வணக்கம் இந்தியா Indian is Back!'- வெளியானது ‘இந்தியன்2’ அறிமுக வீடியோ:

photo

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகி வரும் படம் ‘இந்தியன்2’. பல தடைகளை தாண்டி தயாராகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

photo

இந்த நிலையில்  கமல் ஹாசனின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்  இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் மிரட்டலாக உள்ளார். 'வணக்கம் இந்தியா Indian is Back!' என்ற வசனம் மாஸ்ஸாக உள்ளது. இதனை தமிழில் ரஜினிகாந்த், இந்தியில் அமீர்கான், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் ராஜமௌலி, கன்னடத்தில் சுதீப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்

Share this story