இந்தியாவின் முதல் ஸீ ஃபேண்டஸி ஜானர் படமான 'கிங்ஸ்டன்' டைட்டில் ட்ராக் ரிலீஸ்...!

ஜி.வி. பிரகாஷ் நடித்த 'கிங்ஸ்டன்' படத்தின் 'டைட்டில் ட்ராக்' வெளியாகி உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கிங்ஸ்டன். ஸீ ஃபேண்டஸி ஜானர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ராஜேஷ் பாலச்சந்திரன், சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தியாவின் முதல் ஸீ ஃபேண்டஸி ஜானர் படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The power of the sea, and man's fight for survival 🌊#Kingston - Title track out now!
— G.V.Prakash Kumar (@gvprakash) March 1, 2025
▶️ https://t.co/08CTTUmvq9
India's first SEA FANTASY ADVENTURE starring @gvprakash, in theatres on March 7th.
A film by @storyteller_kp.
Produced by @ZeeStudiosSouth and @ParallelUniPic.…
கிங்ஸ்டன் திரைப்படம் மார்ச் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரெய்லரை யூடியூபில் ட்ரெண்டிங் இருந்து வருகிறது. இந்நிலையில், 'கிங்ஸ்டன்' படத்தின் 'டைட்டில் ட்ராக்' வெளியாகி உள்ளது.