சரத்குமாரை அழ வைத்த திரைப்படம் -"3 பிஎச்கே'படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் .

சமீபத்தில் நல்ல கதையம்சம் உள்ள பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன .பெரிய பட்ஜெட் படங்களை விட சின்ன பட்ஜெட் படங்கள் வசூலை வாரி குவிக்கின்றன .இதற்கு உதாரணமாக டூரிஸ்ட் பேமிலி ,லப்பர் பந்து ,வாழை ,மற்றும் மெட்ராஸ் மேட்னி போன்ற படங்களை உதாரணமாக கூறலாம் .அந்த வரிசையில் விரைவில் வெளியாகும் 3 பிஎச்கே'படமும் இடம் பெற வாய்ப்புள்ளது .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
இந்த நிலையில், இப்படத்தின் நேர்காணலில் பேசிய நடிகர் சரத் குமார், "தமிழ், தெலுங்கு மொழிகளில் 3 பிஎச்கே படத்திற்கான டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன். படத்தில் அந்தளவுக்கு எமோஷன்கள் உள்ள காட்சிகள் உள்ளன என்றார்