விரைவில் வெளியாகும் படம் -''டிஎன்ஏ'' வுக்கு புது அர்த்தம் சொன்ன அதர்வா .

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டி.என்.ஏ' , ''லக்கி பாஸ்கர்'' படத்தில் சுவாரஸ்யமான தாபாத்திரத்தில் நடித்த மானசா சவுத்ரி தற்போது தமிழில் அதர்வாவின் ''டிஎன்ஏ'' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டி.என்.ஏ' . ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
அதர்வா - நெல்சன் வெங்கடேசன் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இப்படம் பற்றி நடிகர் அதர்வா கூறும்போது ,
"டி என் ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் ஃபோனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன்.. அவர் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாக சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக இருந்தேன்.
கதையை சொல்ல தொடங்கும் போது இந்த படத்தின் டைட்டில் டி என் ஏ என்றார். உடனே டி என் ஏ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் டி என் ஏ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார்" என்று அதர்வா கூறினார்