#inimel லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணையும் மியூசிக்கல் வீடியோ - வெளியான ஆச்சரியமான அறிவிப்பு!

inimel poster

ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக இனிமேல் எனும் புதிய மியூசிக் ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மியூசிக் ஆல்பத்தில் பாடல் வரிகளை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். இதனை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடித்து, இசையமைத்து இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

lokeh with shruthihassan

இந்த ஆல்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மியூசிக்கல் ஆல்பம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக்கால் அனைவரும் இந்த ஆல்பத்தினை காண ஆர்வமாக உள்ளனர்.

 

Share this story