இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜிக்கு குவியும் ஆதரவு

இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜிக்கு குவியும் ஆதரவு

பிரபல சமூக வலைதப்பக்கமான இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்நிலையில், அரணம் என்ற திரைப்படத்தில் நடனமாட அமலா சாஜி இரண்டு லட்சம் ரூபாய் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தப் படத்தின் நாயகன் பிரியன் மேடை விழாவில் பேசி இருக்கிறார். இவர் ‘மஸ்காரா போட்டு மயக்குறியே’, ‘மக்காயாலா’ போன்ற பல ஹிட் எழுதியவர் ஆவார். இவர் தற்போது அரணம் என்ற படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது அவர் அமலா சாஜி குறித்து பேசி இருக்கிறார். அப்போது, கேரளாவில் நடனமாடும் பெண் ஒருவர் 2 லட்சம் சார் என்றார். ஏன் எனக் கேட்டேன். அதற்கு அவர் 30 வினாடி சார். என்றார். என கூறியிருக்கிறார். 

ஆனால், அமலா ஷாஜிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். 30 விநாடிக்கு இரண்டு லட்சம் கேட்கிறார் என்றால், அந்த பிரபலத்தை அவர் கடின உழைப்பின் மூலம் பெற்றுள்ளார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் பணத்தை கொடுத்து பணியாற்றவும், இல்லையென்றால் விட்டுவிடவும், என ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

Share this story