“லாபதா லேடீஸ் படத்துக்கு பதிலாக…” - ஆஸ்கர் விருது என்ட்ரி குறித்து வசந்தபாலன் கருத்து

vasantha balan

97-வது ஆஸ்கர் விருதுக்கு ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ என்ற பிரிவில் இந்தியா சார்பில் ‘லாபதா லேடீஸ்’ இந்திப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து இயக்குநர் வசந்தபாலன் மாற்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “Laapataa ladies இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம். ஆனால் அதை விட ‘கொட்டுக்காளி’யோ, ‘உள்ளொழுக்கோ’, ‘ஆடு ஜீவித’மோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

  vasantha balan
ஆமிர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’, திரையரங்கிலும் ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கருக்கு அனுப்புவது குறித்து கிரண் ராவ் கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அங்கீகாரம் எனது குழுவின் அயராத உழைப்புக்குச் சான்று. இந்தியாவைப் போலவே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களையும் இந்தப் படம் ஈர்க்கும்என நம்புகிறேன். அற்புதமான திரைப்படங்களில் இருந்து ‘லாபதா லேடீஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என் பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

திருமணச் சடங்குகள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பெண்ணடிமைத்தனம், , மூட நம்பிக்கைகள் குறித்து பேசியிருந்தது ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம்.

Share this story