அயலான் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்

அயலான் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் 

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி உள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை வௌியாகிறது. 

இந்நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அயலான் படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை,  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது. 
 

Share this story