இயக்குநர் ராஜு முருகன் தயாரிக்கும் 'பராரி’ படத்திற்கு சர்வதேச விருது!

paraari


குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி ’பராரி’ படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

Paraari

இந்நிலையில் 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கல விருதை  'பராரி’ திரைப்படம் பெற்றுள்ளது. 
இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளதோடு, படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story