ஆஸ்கர் விருது வழங்கும் விழா -கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு நடிகர் யார் தெரியுமா ?

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து, உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோரும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.
டேவ் பாட்டிஸ்டா, அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, கில்லியன் ஆண்டர்சன், ஜெர்மி ஸ்ட்ராங் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இதில் பங்கேற்பர்
இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தால் , அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆக உயரும். கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்
அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் இல்லை. மாறாக, வேட்பாளர்கள் அகாடமியின் இரண்டு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும்.நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார். விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.