கைதி 2’ படத்திற்கு இசையமைக்க அழைப்பு : இசையமைப்பாளர் சாம்.சி. எஸ் பேட்டி

kaithi

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் இவரது இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் தான் லோகேஷ் கனகராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல், விஜய், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு வருகிறார். அதன்படி 2025இல் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தார்.

sam cs

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதேசமயம் கைதி பாகம் 1 படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்றது. கைதி படத்தில் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். கைதி 2 படத்திற்கு யார் இசையமைக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் சாம்.சி. எஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கைதி 2 படத்தில் இசையமைக்க லோகேஷ் தன்னை அழைத்ததாக கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “கைதி படத்தில் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்றினேன். அந்தப் படத்தில் கிட்டத்தட்ட 10 கதாபாத்திரங்கள் ஸ்ட்ராங்காக இருந்தது. ஆனால் மாஸ்டர் படத்தில் பெரிய ஹீரோ நடித்ததால் லோகேஷ் பெரிய இசையமைப்பாளரை அழைத்தார்.


லோகேஷ் கனகராஜின் எல்சியு படங்கள் அனைத்திலும் கைதி படத்தில் நான் போட்ட தீம் மியூசிக் பயன்படுத்தப்படுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்துள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் கைதி 2 படத்திற்கு சாம்.சி. எஸ் தான் இசையமைக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this story