மிரளவைக்கும் ‘இறைவன்’ படத்தின் டிரைலர்- தரமான சம்பவம் இருக்கு.

photo

நயன்தாரா, ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘இறைவன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

photo

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மனிதன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படம் தயாராகியுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி, நயன்தாரா, நரேன், விஜயலெட்சுமி, ஆஷிஷ் வித்யார்த், ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் தற்போது வெளியான நிலையில் டிரைலரை பார்த்த பலரும் ராட்சசன் படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர். பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை தேடும் போலீஸ் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ளார். டிரைலரே பரபரப்பை கூட்டும் விதமாக அமைந்த நிலையில் படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில பல காரணங்களால் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Share this story