‘இரவின் நிழல்’ படத்திற்கு தேசிய விருது... வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்த பார்த்திபன் !

iravin nizhal
 ‘இரவின் நிழல்’ படத்திற்கு விருது கிடைத்ததற்கு இயக்குனர் பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். 

கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

iravin nizhal

இந்த விருது கிடைத்தது குறித்து இயக்குனர் பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர், ‘சந்திரயான் 3’ இறங்கும்போது விஞ்ஞானிகள் மட்டுமல்ல, அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். பெருமை அடைந்திருப்பார்கள். அதேபோல ‘இரவின் நிழல்’ படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது அறிக்கப்பட்ட நான் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்கு காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு நன்றி. 

ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு படமாவது பண்ணவேண்டும் என்பது என்னுடைய நீண்ட காத்திருப்பு. அதன் பலனாக இரவின் நிழலில் கிடைத்த மரியாதை கிட்டதட்ட ஃ20 சர்வதேச விருதுகள் கிடைத்தது. அதையெல்லாம் விட தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். 

 

 

Share this story