கமலுக்கு ஜோடியாகிறாரா பிரபல பாலிவுட் நடிகை.. ‘KH234’ படத்தின் முக்கிய அப்டேட்

KH234

 கமல் மற்றும் மணிரத்னம் படத்தின் ஹீரோயின் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கவிருக்கிறார். கமலின் 234வது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். 

KH234

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே திரைக்கதை இறுதி செய்யும் பணிகளை மணிரத்னம் முடித்துவிட்டார். தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வை அவர் நடத்தி வருகிறார். 

KH234

அந்த வகையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே தமிழில் நடிகர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story