கவினின் 'பிளடி பெக்கர்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

kavin

கடந்த சில மாதங்களாக வெளியாகி கொண்டிருக்கும் திரைப்படங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமாக, சில படங்கள் 3:00 மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் கொண்டதாக இருக்கும் நிலையில், கவின் நடித்துள்ள படமான ‘பிளடி பெக்கர்’ மிகக்குறைந்த ரன்னிங் டைமை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில் உருவாகிய ‘பிளடி பெக்கர்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.kavin

இந்த நிலையில், இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் இன்று பார்த்த நிலையில், படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 136 நிமிடங்கள் மட்டுமே எனவும், அதாவது 2 மணி நேரம் 16 நிமிடங்கள் மட்டுமே எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் மிகக்குறைந்த ரன்னிங் டைமை கொண்ட படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ், சுனில் சுகதா, டி எம் கார்த்திக், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஜென் மார்ட்டின் இசையில், சுஜித் சரங் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார்.

Share this story