நடிகை சமந்தாவின் திருமண மோதிரம் விலை இத்தனை கோடியா?

1

சமந்தா தனது திருமண புகைப்படங்களை நேரடியாகப் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங் பைரவி கோவிலில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தின் போது, சமந்தா சிவப்புநிற டவையை அணிந்து இருந்தார். அதோடு தலையில் மல்லிப்பூ வைத்து, கையில் மருதாணி, கழுத்தில் நல்ல ஆபரணத்தை அணிந்து இருந்தார்.

திருமணத்தில் சமந்தா அணிந்து இருந்த மோதிரம் அனைவரின் கண்ணை பறித்தது. அந்த வைரமோதிரத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய வைர மோதிரம் என்று நகை மதிப்பீட்டார்கள் கூறியுள்ளனர். இது ‘கொல்கொண்டா வைரம்’ என்றும், பழங்கால பாரம்பரியதை கொண்டது என்றும், முகாலயர்கள் காலத்தில் பல மன்னர்கள் அந்த மோதிரத்தை தான் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாவில் ‘தி ஜெண்ட்டில்மேன்’ என்ற ஐடி மூலம் பிரபலமான ப்ரியன்ஷு கோயல் என்ற நகைக்கடை உரிமையாளர் ஒருவர் இதுபற்றி வீடியோவொன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சமந்தாவிற்கு அவர் கணவர் திருமணத்தில் அணிவித்த மோதிரத்தின் விலை சுமார் 1.5 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறியுள்ளார்.

மோதிரம் குறித்து அவர் குறிப்பிடுகையில், “இதன் நடுப்பகுதியில் lozenge என சொல்லப்படும் தட்டையான, நீளமான சதுர வடிவிலான ஒரு கட் உள்ளது. வைர நகையான இதில் நடுப்பகுதியில் 2 வெட்டுகளும், சுற்றுப்பகுதிகளில் 8 வெட்டுகளும் வருவதுபோல உள்ளது. பூவின் இதழ்களை மையப்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் இந்த மோதிரம், உண்மையில் அதிக வேலைப்பாடுகளை கொண்டது. மிக மிக நேர்த்தியாக இதை செய்துள்ளனர். குறைந்தபட்சம் இதன் விலை ரூ. 1.5 கோடியாவது இருக்கும்” என்றுள்ளார். தன் குணம் போலவே, தனித்துவமான ஒரு டிசைனை சமந்தா தேர்ந்தெடுத்து மோதிரமாக அணிந்து கொண்டதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள்

Share this story