‘விஜய்’யின் ‘லியோ’ படத்தில் இந்த நடிகரா?- வீடியோவால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.

photo

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிவரும் லியோ திரைப்படத்தில் லெஜண்ட் பட ஹீரோ சரவணன் அருள் இணைந்துள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

photo

ரசிகர்களின் பெரிய எதிர்பர்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் ‘ வியோ’ இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.   இந்த திரைப்படம் லோகேஷின் LCU அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து  பல புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

photo

இதனை தொடர்ந்து யார் காஷ்மீர் சென்றாலும், ஒருவேளை இவர்களும் லியோ படத்தில் நடிப்பார்களோ! என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்புகின்றனர். அந்த வரிசையில் தற்போது லெஜண்ட் நடிகராக சரவணன் அருள் இணைந்துள்ளார். அதற்கு காரணம் அவர் காஷ்மீரிலிருந்து வெளியிட்ட வீடியோ தான். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர் படத்தில் இணைந்து விட்டாரா? இல்லை வெக்கேஷனிற்காக சென்றுள்ளாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story