'வார் 2' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா..?

ஹ்ரித்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் வில்லனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
திரைப்படம் மிகவும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என் டி ஆர் VS 2 ஹ்ரித்திக் ரோஷன் இருவருக்கும் இடையே மோதல் காட்சிகள் டீசரின் ஹைலைட்டாக அமைந்தது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.