அட கடவுளே!.......- ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலமையா!....

ஆஸ்கர் விருது வென்ற பிறகு தனது வாழ்கையில் இப்படி ஒரு சம்பவம் தொடர்வதாக தனது தர்மசங்கசமான நிலைகுறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த டாக்குமென்ரி பிரிவில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட டாக்குமென்ரி படமான யானைகளை வைத்து உருவாக்கிய “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவரும் விருதை பெற்றனர். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட் தயாரிப்பாளர் குனீத் தான் எங்கு சென்றாலும் விருதையும் தன்னுடன் எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சில சமயம் வெளிநாடுகளுக்கு நிகழ்சிகளுகாக செல்லும் போது விமான நிலைய சோதனையில் பையை திறந்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது விருதை பார்த்து இது என்ன என்று கேட்டும் அதிகாரிகளிடம் விருது குறித்து விளக்குகிறேன். உடனே அவர்கள் ஆஸ்கர் விருதா!... என ஆச்சரியமாக பார்ப்பது மட்டுமல்ல விருதுடன் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். ஆனால் என்னுடன் யாரும் புகைப்படம் எடுத்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை என தனது தர்மசங்கட நிலை குறித்து தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல், உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும் விருதுக்கே முக்கியத்துவம் என குமுறுகிறார் குனீத்.