'வேட்டையன்' ரன்னிங் டைம் இவ்வளவா? என்ன சர்டிபிகேட்?

vettaiyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதுடன், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு உள்ளதால், வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், "வேட்டையன்" படத்தின் சென்சார் பணிகள் நேற்று முடிவடைந்ததாகவும், இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு மட்டும் அல்லாமல், இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் எனவும் கூறப்படுகிறது. தயாரிப்பு தரப்பில் இருந்து இன்று அல்லது நாளை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.vettaiyan

பொதுவாக மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றால், ரசிகர்களுக்கு மிகைப்படுத்துதலாக இருக்கும் என்பதால் சமீப காலமாக மூன்று மணி நேரத்துக்கும் குறைவான படங்கள்தான் வெளியாகி வருகிறது, மேலும் குறைவான ரன்னிங் டைம் உள்ள படங்கள்தான் வெற்றியும் பெற்று வருகின்றன. இதற்கேற்ப, "வேட்டையன்" படம் 3 மணி நேரத்திற்கு 13 நிமிடங்கள் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Share this story