மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு – ‘சந்திரமுகி 2’ பட இயக்குநர் பி. வாசு உடன் மோதலா? தகவல்கள் தெரிவிப்பது என்ன!
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் ‘சந்திரமுகி’ இந்த படத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு மற்றும் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர்ஹிட் வசூலை வாரிக்குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் 18 வருடங்களுக்கு பிறகு தற்போது தயாராகி வருகிறது. படத்தை, முதல் பாகத்தின் இயக்குநரான பி. வாசு தான் இயக்குகிறார்.
இந்த பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ராகவா லாரன்ஸ் முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்தின் சிஷ்யனாக நடிக்கிறார். தொடர்ந்து கங்கனா சந்திரமுகியாக நடிக்கிறார். சந்திரமுகிக்கும், வேட்டையனுக்குமான கதையே இந்த படத்தின் கதைக்களமாக எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் வடிவேலு, இயக்குநர் பி. வாசுவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டியதாகவும் செய்திகள் பரவின. இது குறித்த தகவலதான் தற்போது வெளியாகியுள்ளது, அதாவது, படப்பிடிப்பு தளத்தில் எந்த சண்டையும் ஏற்படவில்லையாம் அதுமட்டுமல்லாமல் மைசூர், ஐதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.