நாளை வெளியாகும் ‘IsKisKifa’ லிரிக்கல்.. ‘LGM’ புதிய அப்டேட்

LGM

 ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘LGM’ படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இளம் பெண்களின் கனவு நாயகனாக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். அவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘LGM’. வித்தியாசமான கதைக்களத்தில் காதல் மற்றும் குடும்ப படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

LGM

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ நாயகி இவானா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கியுள்ளார்.

LGM

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் IsKisKifa என்று தொடங்கும் அடுத்த பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 


 


 

Share this story