ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கும் லவ் -யார் ஹீரோ தெரியுமா ?
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'ஆஷா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த வரிசையில், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'லவ்', நேரடியாக நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "அர்ஜுன் தாஸும் நானும் முன்பொருமுறை இணைந்து நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப்போனது. இதனால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். இருப்பினும், தற்போது 'லவ்' படத்தின் மூலம் அந்த நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது.

