"துல்கர் சல்மானுடன் நடிக்க முடியாது "-இப்படி கூறும் நடிகை யார் தெரியுமா ?

thulkar

பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் ஜோடியாக ‘கிங் ஆஃப் கொத்தா’ என்ற படத்தில் நடித்தபோது சந்தித்த கேலி, கிண்டல் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த படத்தில் நான் பேசிய வசனங்கள், துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை ராஜூவேட்டா என்று அழைத்தது இணையதளங்களில் கேலிக்குள்ளானது. எனது நடிப்பு குறித்த சில விமர்சனங்கள் நியாயமானவை என்றாலும், இன்னொரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு உதவி இயக்குனரே என்னை ராஜூவேட்டா என்று அழைத்து கிண்டல் செய்தது அதிக மன வேதனையை ஏற்படுத்தியது.

அதனால்தான் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் பட வாய்ப்புகளை மறுக்க தொடங்கினேன். கடந்த ஓணம் பண்டிகைக்கு வெளியாவதற்காக உருவாக்கப்பட்ட விளம்பர படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், என்மீதான எதிர்மறை விமர்சனங்கள் அந்த விளம்பர படத்தை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக, அதில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்’ என்றார்.

Share this story