"தற்போது அதிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்"-ஐஸ்வர்யா லஷ்மியின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா

lakshmi menon

திரைத்துறையில் நீடிப்பதற்கும், தற்கால மாற்றங்களை எதிர்கொள்வதற்கும் சமூக வலைத்தளங்கள் மிகவும் அத்தியாவசியமானது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வந்த டாக்டரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி, அவை தனது சொந்த சிந்தனையையும், மகிழ்ச்சியையும் பறிப்பதாக சொல்லி, கடந்த 2025 செப்டம்பர் மாதம் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் கூறுகையில், ‘சமூக வலைத்தளங்களை விட்டு விலகி ஒரு ஆண்டுக்கும் மேலாகி விட்டது.

இந்த முடிவு எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய படைப்பாளிகள் தங்களது திறமையை நேரடியாக வெளிப்படுத்த இதுபோன்ற தளங்கள் உதவுகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. எனினும், எனது தனிப்பட்ட காரணங்களுக்காக அதிலிருந்து வெளியேறிய பின்பு, எந்தவொரு தேவையற்ற சலனங்களும் இல்லாமல், தற்போது அதிக நிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்’ என்றார்.

Share this story