"விஷ்ணு விஷால் அற்புதமான ஒரு சக நடிகர்"-பாராட்டிய ஐஸ்வர்ய லஷ்மி
கட்டா குஸ்தி 2படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு ஷீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், ‘50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் எனக்கு பெருமகிழ்ச்சி. விஷ்ணு விஷால் அற்புதமான ஒரு சக நடிகர். படம் வெளியான பின்பு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் நான் நன்றாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த அவருக்கு நன்றி. சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவா இங்கு வந்துள்ளார். நடனக்கலைஞர்களின் திறமையை ஆச்சரியத்துடன் ரசிப்பேன். ‘கட்டா குஸ்தி’ படத்தின் 2 பாகங்களிலும் கீர்த்தி என்ற கேரக்டருக்காக என்னை தேர்வு செய்த இயக்குனருக்கு நன்றி. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பையும், மக்களிடம் நான் பெற்ற அன்பையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.

