'குட் பேட் அக்லி' கதையை த்ரிஷாவுக்கு சொன்னதே அஜித் சார் தான் : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..

ak

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் கதையை த்ரிஷாவுக்கு சொன்னதே அஜித் சார் தான் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், சிம்ரன் உள்ளிட்ட பாலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.அந்த வகையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “திரிஷாவுக்கு நான் கதை சொல்வதற்கு முன்பே, அஜித் அவருக்கு கதை சொல்லிவிட்டு, அவரிடம் அனுமதியும் பெற்றுவிட்டார்” என்ற தகவலை கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ak

"விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்தை நான் சந்தித்துவிட்டு அதன்பின்னர் அங்கிருந்தே த்ரிஷாவிடம் போனில் பேசினேன். 'உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டர் இருக்கிறது' என்று சொல்லியபோது, அவர், 'ஏற்கனவே அஜித் என்னிடம் என் கேரக்டர் பற்றி கூறிவிட்டார்' என்று கூறியதோடு 'நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்' என்றும் தெரிவித்தார். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பிறகு அவர் மிகுந்த ஆர்வத்துடன் தனது கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடித்தார். நல்ல ஒத்துழைப்பும் வழங்கினார்." என்று கூறினார்.



அதேபோல், அஜித்தின் சுறுசுறுப்பும் குறித்து அவர் கூறியபோது, ‘இந்த படத்தில் அஜித்தின் காட்சிகளை வெறும் 72 நாட்களில் முடித்துவிட்டோம். பொதுவாக ஒரு காட்சி முடிந்தவுடன் ஹீரோக்கள் கேரவனில் போய் உட்கார்ந்துவிடுவார்கள். ஆனால் அஜித், படப்பிடிப்பு தளத்திலேயே சேர் போட்டு உட்கார்ந்துவிடுவார், 'அடுத்த காட்சியையும் எடுத்து விடலாம், ரெடி பண்ணுங்கள்' என்று கூறுவார். அவர் இவ்வளவு எனர்ஜியாக இருக்கும்போது, 'ஓடுங்கடா!' என்று என் அசிஸ்டன்டுகளை அடுத்த காட்சிக்கு தயார் செய்யச் சொல்வேன்." என்று கூறினார். அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Share this story